?:text
|
-
டெல்லி ரிஜெக்ட்ஸ் AAP என்ற பக்கத்தால் பேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு இடுகை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் 18 நொடி காணொலியைக் காட்டுகிறது. இக்காணொலியில், முதல்வர் கெஜ்ரிவால், “உங்கள் நிலம், அடிப்படை விலை மற்றும் மண்டிகள் ஆகியவை பறிக்கப்பட மாட்டாது. ஒரு விவசாயி இப்போது தனது பயிரை நாட்டில் எங்கும் வேண்டுமானாலும் விற்க முடியும். இனி விவசாயிக்கு நல்ல விலை கிடைக்கும், அவர் மண்டிக்கு வெளியே எங்கும் விற்கலாம். இது கடந்த 70 ஆண்டுகளில் விவசாயத் துறையில் நடந்த மிகப்பெரிய புரட்சிகர நடவடிக்கையாக இருக்கும்,” என்று கூறுகிறார். அதனுடன் பகிரப்படும் இடுகையில், “அவருக்கு எல்லாம் தெரியும், ஆனால் எதுவும் செய்யமாட்டார். இக்காணொலியில், மூன்று வேளாண் மசோதாக்களின் நன்மைகளையும் அவர் கூறுகிறார்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
(ta)
|